உக்ரைனுக்கு €90 பில்லியன் நிதியுதவியை வழங்க ஒப்புதல்!
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுக்கு €90 பில்லியன் (£78.8 பில்லியன்) நிதி உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்று ஒன்றுக்கூடியிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உக்ரைனின் இராணுவ மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வட்டியில்லாத கடனாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
உதவி தொகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றிக் கூறியுள்ளார்.
இருப்பினும் உக்ரைனுக்கு உதவுவதில் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் ததலைவர்கள் மத்தியில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டவில்லை.





