இலங்கையில் சிக்குன்குன்யா வைரஸ் – அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை
இலங்கைக்கு செல்லும் அனைத்து பயணிகளும் மேம்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) எச்சரித்துள்ளது.
டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவால் இலங்கையின் உட்கட்டமைப்பும் சுகாதார சேவைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பயணிகள் நுளம்பு கட்டுப்பாடு, தூய்மை, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றல், மற்றும் தேவையெனில் உடனடியாக மருத்துவ உதவிகளை அணுகுதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.





