ஸ்பெயினில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றம்!
ஆவணமற்ற நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை ஸ்பெயின் (Spain) காவல்துறையினர் இன்று வெளியேற்றியுள்ளனர்.
அவர்கள் பார்சிலோனாவின் (Barcelona) வடக்கே படலோனாவில் (Badalona) அமைந்துள்ள பாடசாலையொன்றில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
குளிர்காலத்திற்கு மத்தியில் இது தொடர்பில் அறிந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோர், காவல்துறையினரின் வருகைக்கு முன்னர் வேறு பாதுகாப்பான இடங்களை கண்டுப்பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
செனகல் (Senegal) மற்றும் காம்பியாவிலிருந்து (Gambia) வந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தோரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு வசதிகளை அணுகுவதற்கான உதவிகளை செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.





