ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் தாக்குதல் : போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வான்வெளி தாக்குதல்களுக்கு மத்தியில் போலத்தில் உள்ள நேட்டோ போர் விமானங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வார்சாவில் (Warsaw) உள்ள ஆயுதப்படை செயல்பாட்டுக் கட்டளை தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை அறிவித்துள்ளது.

போர் விமானங்கள் தயார்படுத்தப்பட்டு, தரை அடிப்படையிலான வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் உளவு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக  அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்தின்  வான்வெளி மற்றும் அதன் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது துருப்புகள் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளதாகவும் குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!