19 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!
நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதி உள்ளிட்ட அவசரகால செயல்பாடுகளுக்காக நிதிகோரி முன்வைக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்காகவே இந்த விசேட சபை அமர்வு இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.
இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறும் நோக்கிலேயே 19 ஆம் திகதி சபை கூட்டப்படுகின்றது.
விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து, அதற்குரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குரிய உரமை, அரசமைப்பின் பிரகாரம் பிரதமருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.




