“நான் ஒரு சிங்களப் போர் வீரரால் மீட்கப்பட்டேன்”: அர்ச்சூனா
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சூனா இன்று (டிசம்பர் 5, 2025) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், தான் வெள்ளத்தில் சிக்கியபோது இராணுவ வீரர்களால் (War Heroes) மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது “நான் காரோடு வெள்ளத்தில் சிக்கிக்கொண்டேன். எனது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.”
பின்னர் “எனது கார் ஒரு வயல்வெளிக்கு தள்ளபட்டது அங்கு இருந்து நான் மீட்கப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “நான் இராணுவ வீரர்களால் மீட்கப்பட்டு, கடற்படை முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டேன்”
“நான் ஒரு சிங்களப் போர் வீரரால் மீட்கப்பட்டனான்”
தங்கவைக்கப்பட்ட எனக்கு ” அங்கு ஒரு கேணல் (Colonel) அவர்கள் எனக்கு இரண்டு நாட்களுக்குத் தமது அறையைக் கொடுத்து தங்கச் செய்தார்.”
“ஆனால், நீங்கள் அவர்களைப் ‘படையினர்’ என்று குறிப்பிட்டீர்கள். தயவுசெய்து அவர்களுக்காக வரவு செலவுத் திட்டத்தில் (Budget) பெரும் தொகையை ஒதுக்குங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.





