400க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்து!
இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 4வது நாளாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 400 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 62 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விமானங்களை இயக்குவதற்கு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இல்லாததே இந்த ரத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஒரு இண்டிகோ பயணியைக் கூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை விமான நிலையத்தின் CISF-க்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.





