பேரிடர் முகாமைத்துவம்: அரசாங்க தலைமைத்துவம் தோல்வி!
பேரிடரென்பது தேசிய நெருக்கடியாகும். இந்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு எதிரணி முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறி இருந்தது.
எனினும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்குரிய அரசியல் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை.
ஏனெனில் அதிகாரிகளுக்கும் செயல்படுவதற்கு வரையறைகள் உள்ளன.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, அவசர கால சட்டம் தற்போது அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.





