தமிழ்நாடு தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும் – இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் மார்சில்
 
																																		மார்ச் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடப்பதற்குரிய சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
“தேசிய மக்கள் சக்திமீது இந்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்தனர். ஆனால் அரசாங்கத்தின் தற்போதைய பயணத்தைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரலில் நடக்கவுள்ளது. தேர்தல் களத்தில் இலங்கை விவகாரமும் எதிரொலிக்கும். எனவே, இங்கு மாகாணசபைத் தேர்தல் நடப்பதற்கு அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்,” எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.
 
        



 
                         
                            
