இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு அழுத்தம்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியை விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதும் நிறுத்தப்பட வேண்டும். கடந்தகாலங்களில் அரசியல் பழிவாங்கலுக்கே அந்த ஏற்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புக் காவலால்தான் ஜே.வி.பியினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் அதனை நீக்க வேண்டும்.” – எனவும் சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டார்.
(Visited 5 times, 5 visits today)





