கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் நடிகர் விஜய்
கடந்த மாதம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்(Tamilaga Vetri Kalagam) தலைவருமான விஜய் நாளை மாமல்லபுரத்தில்(Mamallapuram) உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
கரூர் மற்றும் சில மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்கள், தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துகள் மூலம் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
“இது ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும், ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. விஜய் ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்திப்பார்” என்று கட்சியின் தகவல் தொடர்பு குழு உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 27ம் திகதி தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் குழந்தைகள் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.





