இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாய்லாந்தின் வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் தாய்லாந்தின் தொழில் கூட்டமைப்பு, தாய்லாந்தின் சுற்றுலா கவுன்சில், தாய்லாந்தின் முதலீட்டு சபை, தாய்லாந்தில் உள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் மற்றும் தாய்லாந்தின் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்டவற்றின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கையில் முதலீடு செய்யும் போது தமது பொருட்களை விற்பனை செய்வதற்கு வரிச்சலுகைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் பல சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் வலுவான மத கலாசார மற்றும் சமூக பிணைப்புக்கள் காணப்படுகின்றமையால் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.