ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை – புட்டினுக்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் முயற்சி

ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை இலக்கு வைக்கும் வகையில் அமெரிக்கா புதிய தடைகளை அறிமுகம் செய்துள்ளது.
உக்ரேனுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முயற்சி செய்து வருகின்றார்.
அதற்கமைய, தடைகளை விதித்து ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) நேட்டோ செயலாளர் நாயகம் மார்க் ருத்தேவை (Mark Rutte) சந்தித்த பின் கருத்து வெளியிட்டார்.
உக்ரேனின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தாம் ரஷ்ய ஜனாதிபதியுடன் புடாபெஸ்ட் (Budapest) நகரில் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 8 visits today)