முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) ஆகியோர் அரிய மண் மற்றும் முக்கியமான கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
வெள்ளை மாளிகையில் இன்று நடந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்திற்காக நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் வர்த்தகம், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இராணுவ உபகரணங்களைப் பற்றியும் விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களில் இரு நாடுகளும் தலா 1 பில்லியன் டாலர்களை சுரங்க மற்றும் செயலாக்கத் திட்டங்களில் முதலீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மீதான அமெரிக்காவின் புதிய வரிகள் மற்றும் பிற பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.