ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்பில் கேள்விக்குறியாகும் மதீஷ பத்திரனவின் எதிர்காலம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன அடுத்த ஐ.பி.எல் சீசனில் விளையாடுவதில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் காயங்களால் சில போட்டிகளை தவறவிட்ட பத்திரனா, 2025ஆம் ஆண்டு13 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
டெத் ஓவர்களில் சிறந்த யோர்க்கர் வீச்சால் அவர் புகழ்பெற்றிருந்தாலும், தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் முழுமையாக பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக பத்திரனவின் உடற்தகுதி மற்றும் செயல்திறன் குறித்து இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
அவரது பந்துவீச்சு பாணியில் சமீப காலமாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், மெதுவான பந்துகளை வீச பயிற்சியாளர்கள் ஊக்குவித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பத்திரனவின் தனித்துவமான பாணி மற்றும் தோனி அளிக்கும் ஆலோசனைகள் அவரது ஆட்டத்தைக் காத்து வருவதாக சில தரப்பினர் குறிப்பிட்டுள்ளர்.
எனினும், அதிக ஆலோசனைகளால் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பில் பத்திரனவை சென்னை அணி மீண்டும் தக்கவைத்துக்கொள்ளுமா என்பது தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





