சுற்றுலாவுக்காக இலங்கை வந்த பெண்களை ஏமாற்றியவர்களுக்கு நேர்ந்த கதி
சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 2 வெளிநாட்டுப் பெண்களிடம் பயண கட்டணத்தை விட அதிகமாக பணம் பறித்ததாகக் கூறப்படும் 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவை சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து 10,000 மற்றும் 30,000 ரூபாய் கப்பம் பெற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இரண்டு ஓட்டுநர்களும் மேலதிக விசாரணைக்காக குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி காவல் நிலையங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.





