காசா அமைதி திட்டத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மோடி மற்றும் ஜெலென்ஸ்கி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து இந்திய பிரதமர் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி, பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி Xல் ஒரு பதிவில், “ஜனாதிபதி டிரம்பின் காசா அமைதித் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எனது நண்பர் நெதன்யாகுவை வாழ்த்தினேன். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மேம்பட்ட மனிதாபிமான உதவி தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், உலகில் எங்கும் எந்த வடிவத்திலும் அல்லது வெளிப்பாட்டிலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அவரை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்று, இது பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் ஒரு முக்கியமான வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்
Xல் ஒரு பதிவில், “மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பு நனவாகும் தருணம் நெருங்கி வருவது முக்கியம். இது அந்த ஒரு பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் முக்கியமானது. அனைவருக்கும் உதவக்கூடிய ஒரு ஒப்பந்தம் முன்னேறி வருகிறது” என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.





