ஆசியா செய்தி

தலைமுடிக்கு நிறம் பூசிய சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

20 வயது சீனப் பெண் ஒருவர் தனது விருப்பமான பாப் பாடகரின் தோற்றத்தை பின்பற்றி கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் தனது தலைமுடியின் நிறத்தை மாற்றியதால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஹுவா, கால்களில் சிவப்பு புள்ளிகள், மூட்டு வலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை செய்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பரிசோதனையின் போது அவரது சிறுநீரகங்களில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜெங்ஜோ மருத்துவமனையின் பெண் மருத்துவரான தாவோ சென்யாங், இது அவரது உடலில் நுழையும் ரசாயன நச்சுக்களால் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

முடி சாயத்தில் சிறுநீரகம் மற்றும் சுவாசக் கோளாறுக்கு வழிவகுக்கும் நச்சுகள் இருப்பதாகவும், இது புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் எனவும் முடி சாயங்களில் ஈயம் மற்றும் பாதரசம் இருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி