அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டம் – இஸ்ரேல் எடுத்த அதிரடி நடவடிக்கை
காசா மீதான போர் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்தின் கீழ், அதன் முதல் கட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய அந்த அமைதித் திட்டத்தை அமல்படுத்த இஸ்ரேலிய இராணுவம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்துத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இது தொடர்பாக, இஸ்ரேலிய இராணுவத் தலைவர் இராணுவ மற்றும் புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தியதாகப் பாதுகாப்புத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில், காஸா பிரச்சினையைச் சுற்றிய அண்மை நிலைமைகள், பிணையாளிகள் மற்றும் காணாமல்போனவர்கள் மீட்பு நடவடிக்கைகள் போன்றவை விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அமைதித் திட்டத்தின் முதற்கட்டம் செயல்படுத்தப்படும் போது, இஸ்ரேலிய இராணுவத்தினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் மீண்டும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகள் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையிலான நிலையை எப்படி மாற்றும் என்பதை உலக நாடுகள் கவனிக்கின்றன.





