இந்தியாவுக்காக குரல் கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்காவை ரஷ்யா விமர்சித்துள்ளது.
இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்காவை குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை நிறுத்த இந்தியாவை அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற கோரிக்கைகளுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது எனவும் யாருடைய முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படாது எனவும் புட்டின் கூறியுள்ளார்.
“இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமநிலையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர். ரஷ்யாவும் இந்தியாவும் ஒரு சிறப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது முற்றிலும் பொருளாதார செயல்முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் ஒப்பந்தங்களில் எந்த அரசியல் அம்சமும் இல்லை. அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமப்படுத்தப்படும். மேலும் அது ஒரு இறையாண்மை கொண்ட தேசத்தின் நற்பெயரைப் பெறும்” என புட்டின் மேலும் தெரிவித்துள்ளார்.





