பிரித்தானியாவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04.10) பலத்த மழை பெய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் லண்டனின் புகழ்பெற்ற ரோயல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனமழை மற்றும் காற்றின் காரணமாக வடக்கு அயர்லாந்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 200,000 க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பதாக கூறப்படுகிறது.
பொறியியலாளர்கள் சுமார் 62,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் மேற்கு கடற்கரையில் உள்ள டைரி தீவில் மணிக்கு 96 மைல் (154 கிமீ) வேகத்தில் காற்று வீசியதாக பிரித்தானியாவின் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஸ்கொட்லாந்தில் படகு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மரங்கள் வீழ்ந்துள்ளமையால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





