Womens WC – இந்திய அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
13வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி 7 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து 270 என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
ஆரம்பத்தில் இந்திய அணியை பந்தாடிய இலங்கை அணி தலைவர் சமாரி அத்தப்பத்து 43 ஓட்டங்கள் பெற்று கொடுத்தார்.
அவரை தொடர்ந்து வந்த இலங்கை வீரர்கள் இந்தியப் பந்துவீச்சில் தடுமாறி விக்கெட்களை குறைந்த ஓட்டங்களுக்கு பறி கொடுத்தனர்.
தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ஸ்னே ராணா மற்றும் சரணி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியை 211 ஓட்டங்களுக்கு முடக்கியது.





