தென் கொரியாவில் முடங்கிய அரசாங்க ஒன்லைன் சேவைகள்
தென் கொரியாவின் அரசாங்க ஒன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அரசாங்க தரவு மையத்தின் ஐந்தாவது மாடியில் கணினி பேட்டரி வெடித்ததை அடுத்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் அரசாங்க ஒன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அஞ்சல் சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் உட்பட 647 அரசாங்க சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரிய பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகம் உட்பட பல அரசாங்க வலைத்தளங்களும் அணுக முடியாதவை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைபட்ட ஒன்லைன் சேவைகள் விரைவாக மீட்டெடுக்கப்படும் என்று தென் கொரிய அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.





