காங்கோவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் – நிதி, வளங்கள் இன்றி தவிக்கும் மக்கள்!
காங்கோவில் எபோலா தொற்றால் பலர் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாடு மருந்தின்றி தவிப்தாக தெரியவந்துள்ளது.
நிதி மற்றும் வளங்கள் பற்றாக்குறை தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கோவில் எபோலா தொற்றால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 57 வழக்குகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இறப்பு விகிதம் 61 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தொற்றுநோயை விரைவாகக் கட்டுப்படுத்தவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாக்கவும், உயிர்காக்கும் நடவடிக்கையை ஆதரிக்க எங்கள் கூட்டாளர்களும் நன்கொடையாளர்களும் அவசரமாக முன்வர வேண்டும்” என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், வெடிப்பைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக 20 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுவதாக கோரப்படுகிறது. இந்த உதவியானது 965,000 மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





