இலங்கையில் திறனற்ற மின்சாதனங்களை பாவிப்பதால் மின் கட்டணம் உயர்கிறதா?
மக்கள் திறனற்ற மின்சாதனங்களை பாவிப்பதே மின்கட்டண உயர்வுக்கு காரணமாக உள்ளதாக இலங்கை நிலையான எரிசக்தி ஆணையத்தின் இயக்குனர் ஹர்ஷ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் திறமையற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணமாக இருப்பதை ஆய்வுகள் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சனை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளில் காணப்படுகிறது எனவும் ஏர் கண்டிஷனர்களிலும் இந்த பிரச்சினை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மேற்கு மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதன் காரணமாக, மாதத்திற்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் மின்சார நுகர்வு உள்ளது. மேலும், இலங்கைக்குள் திறனற்ற உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் கண்டிஷனர்களுக்கும் இதே விதி கடுமையாக்கப்படும்.” எனக் கூறியுள்ளார்.





