ஆந்திராவில் கொதிக்கும் பாலில் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

பாடசாலை சமையலறைக்குள் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் பால் பானையில் தற்செயலாக விழுந்த ஒன்றரை வயது சிறுமி தீக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.
அனந்த்பூர் மாவட்டம் புக்கராயசமுத்திரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் குருகுல பாடசாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சேவா உச்ச நிறுவனத்தின் கீழ் உள்ள பாடசாலையில் பாதுகாவலராக பணிபுரியும் தனது தாயுடன் 17 மாத குழந்தை அக்ஷிதா சமையலறையில் இருந்துள்ளார்
மாணவர்களுக்கு விநியோகிக்க தயாரிக்கப்பட்ட சூடான பால் குளிர்விக்க வைக்கப்பட்டிருந்தது. அப்போது அக்ஷிதாவும் அவரது தாயார் கிருஷ்ணவேணியும் சமையலறையை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
பின்னர் தனது தாயார் இல்லாமல் அறைக்குள் குழந்தை மீண்டும் வந்தது, அதே நேரம் சமயலறையில் ஒரு பூனை பானையை நோக்கி வந்துள்ளது
பூனையைப் பின்தொடர்ந்து பால் பானையை நெருங்கும்போது, அக்ஷிதா தடுமாறி நேரடியாக பானைக்குள் விழுந்து கடுமையான தீக்காயங்களுக்கு ஆளானாள்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.