நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் இடையே சந்திப்பு

நியூயார்க்கில் நடந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) ஒரு பகுதியாக, பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார்
குறித்த சந்திப்பில் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷ்க்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி பேசப்பட்டதாக தலைமை ஆலோசகரின் பத்திரிகை செயலாளர் ஷஃபிகுல் ஆலம் தெரிவித்துள்ளார்.
இது யூனுஸ் மற்றும் ஷெரீப்புக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு ஆகும். கடந்த ஆண்டு UNGA கூட்டத்தின் போது முதல் சந்திப்பு இடம்பெற்றது.
பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பைத் தவிர, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் கொசோவோ ஜனாதிபதி வ்ஜோசா ஒஸ்மானி உள்ளிட்ட மூன்று உலகத் தலைவர்களுடன் யூனுஸ் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும், நாட்டில் ஜனநாயக மாற்றத்தை உறுதி செய்வதற்காக, வரவிருக்கும் வங்காளதேச தேசியத் தேர்தல்களுக்கு பின்லாந்தும் இத்தாலியும் தங்கள் ஆதரவை வழங்கியதாக பத்திரிகை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.