பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மற்றுமொரு புயல் எச்சரிக்கை – விமான சேவைகள் இரத்து!

பிலிப்பைன்ஸை ரகாசா புயல் தாக்கியதை தொடர்ந்து மற்றுமொரு புயல் தாக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் அரசாங்கம் பள்ளிகளை மூடியுள்ளதுடன், விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை, புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பிகோல் துறைமுகங்களில் சுமார் 1,500 பேர் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளிகளால் பாதிக்கப்படுகிறது, இது பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மில்லியன் கணக்கான மக்களை நிலையான வறுமையில் தள்ளுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதனால் இயக்கப்படும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் உலகம் வெப்பமடைவதால் புயல்கள் மிகவும் சக்திவாய்ந்ததாகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.