இந்தியா : லடாகில் வெடித்த மக்கள் போராட்டம் – ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் போரட்டம் வன்முறையாக உருவெடுத்துள்ளது.
இதில் போராட்டக்கார்கள் பா.ஜ.கவின் அலுவலகத்திற்கு தீவைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை வெளியிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் நாற்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் தற்போது அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.





