ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மெல்போர்னைச் சேர்ந்த 71 வயது நபர் ஒருவர் விமானத்தில் பெண்ணிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்னுக்குப் பறக்கும் போது ஒரு ஆண் தன்னை தகாத முறையில் தொட்டதாக அந்தப் பெண் விமானக் குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் விமானக் குழுவினர் அந்தப் பெண்ணை வேறு இருக்கைக்கு மாற்றினர், மேலும் ஆஸ்திரேலிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

தரையிறங்கியதும் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, விமானத்தில் ஒரு பெண்ணை குற்றவியல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் பிராட்மெடோஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் பாதுகாப்பாக உணர வேண்டும் எனவும் குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி