இஸ்ரேல் மீது ஏமன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 22 பேர் படுகாயம்

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம் தெற்கு ரிசார்ட் நகரமான ஈலாட்டைத் தாக்கியதாகவும், மீட்புப் பணியாளர்கள் இருபது பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு படையினர் அதைத் தடுக்கத் தவறியதால், செங்கடல் கடற்கரையில் உள்ள ஈலாட் பகுதியில் ஆளில்லா விமானம் விழுந்ததாக இராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் அவசர மருத்துவ சேவை குழுவின் 22 பேர் காயமடைந்தனர், இதில் 26 மற்றும் 60 வயதுடைய இரண்டு ஆண்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் பகுதியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
யூத புத்தாண்டான ரோஷ் ஹஷானாவின் இரண்டாவது நாளில் நடந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
(Visited 2 times, 1 visits today)