AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆபத்தில் உள்ள பெண்களின் தொழில்கள்!

செயற்கை நுண்ணறிவால் பெண்களின் வேலைகள் விகிதாச்சாரத்தில் இல்லாத அளவுக்கு ஆபத்தில் உள்ளதாக புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
ஆண்களின் வேலைகளில் 21% உடன் ஒப்பிடும்போது, உலகளவில் கிட்டத்தட்ட 28% பெண்களின் வேலைகள் அச்சுறுத்தலில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய தொழில்நுட்பப் பணியாளர்களில் பெண்கள் சுமார் 29% மட்டுமே உள்ளனர் மற்றும் தொழில்நுட்பத் தலைமைப் பதவிகளில் வெறும் 14% மட்டுமே உள்ளனர்.
தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பில் பல தசாப்த கால முன்னேற்றத்தைப் பாதுகாக்க, பெண்களின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் முதலீடு செய்யவும், பொருளாதாரத் துறைகளில் சுமூகமான மாற்றங்களை எளிதாக்கவும், குறித்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
AI மற்றும் ஆட்டோமேஷன் உலகளவில் தொழில்களை மறுவடிவமைப்பதால், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண்கள் பின்தங்குவதைத் தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.