ரகாசா புயல் எதிரொலி – 25 பேர் உயிரிழப்பு, மில்லியன் கணக்கானோர் வெளியேற்றம்!
ரகசா புயல் காரணமாக தைவானில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பிலிபைன்ஸில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவின் குவாங்டன் மாகாணத்தில் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
சில பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 241 கிமீ (சுமார் 150 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் புயல் தொடர்பான அறிவிப்புகள் வந்ததை தொடர்ந்து பல மாகாணங்கள் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடியிருந்தது. இது பெரும்பாலான உயிர்களை காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)





