பிரித்தானியா முழுவதும் மூடப்படும் பிரபல நிறுவனம் – சிக்கலில் உள்ள தொழிலாளர்கள்!
பிரித்தானியா முழுவதும் உள்ள 19 அமேசான் ஃப்ரெஷ் மளிகைக் கடைகளையும் மூட அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனால் பலர் தொழிலை இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
அமேசன் நிறுவனமானது தனது வியாபாரத்தை Online முறையில் மாற்ற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், வணிகத்தின் பிற பகுதிகளில் அவர்களுக்கு புதிய பணிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
கூட்டாளர்கள் மூலம் பிரைம் உறுப்பினர்களின் மளிகைப் பொருட்களை அணுகுவதை இரட்டிப்பாக்கவும், அடுத்த ஆண்டு முதல் Amazon.co.uk இல் புதிய மளிகைப் பொருட்களை அறிமுகப்படுத்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





