வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“தேசிய அடையாள அட்டை (NID) தடை செய்யப்பட்ட எவரும் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க முடியாது” என்று தேர்தல் ஆணையச் செயலாளர் அக்தர் அகமது குறிப்பிட்டுள்ளார்.
அகமது வேறு எந்த பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் வங்கதேச செய்தி நிறுவனம், ஹசீனாவின் தங்கை ஷேக் ரெஹானா, மகன் சஜீப் வாஸெட் ஜாய் மற்றும் மகள் சைமா வாஸெட் புட்டுல் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ரெஹானாவின் குழந்தைகள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் மற்றும் மருமகன் ரத்வான் முஜிப் சித்திக் பாபி, அவரது மைத்துனரும் ஹசீனாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தாரிக் அகமது சித்திக், அவரது மனைவி ஷாஹின் சித்திக் மற்றும் அவர்களது மகள் புஷ்ரா சித்திக் ஆகியோரும் வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.