இந்தியா உட்பட 23 நாடுகளை போதைப்பொருள் கடத்தல் நாடுகளாக பெயரிட்ட டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 23 நாடுகளை போதைப்பொருள் கடத்தல் அல்லது போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை 23 நாடுகளில் அடங்கும்.
பட்டியலில் உள்ள மற்ற நாடுகளில் பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்ஸிகோ, நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்கும்.
மேற்கூறிய பட்டியலில் ஒரு நாடு இருப்பது, அதன் அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகள் அல்லது அமெரிக்காவுடனான ஒத்துழைப்பின் அளவைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)