இந்தியாவில் இறுதிச்சடங்கின் போது உயிர்பெற்ற இளைஞன் – அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞன் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவருக்கு இறுதிச்சடங்கைச் செய்யக் குடும்பத்தினர் தொடங்கினர்.
19 வயது பாவ் லச்கே என்ற இளைஞன் திடீரென்று இருமத் தொடங்கியதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விளக்கம் கேட்டனர்.
முதலில் மருத்துவர்கள் லச்கேவுக்குப் பிழைக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கூறியிருந்தனர். அதை நம்பி குடும்பத்தினர் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அவருக்குச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.
குடும்பத்தினர் மருத்துவர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். லச்கே இறந்துவிட்டதாகத் தவறாக அறிவித்தது எல்லோருக்கும் தவறான எண்ணத்தைக் கொடுத்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவிக்கவில்லை என்று மருத்துவமனையின் பேச்சாளர் கூறியிருக்கிறார்.