நேபாளம் – காத்மாண்டில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இரத்து!

நேபாள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையம் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
நேபாளத்தில் நீடித்து வரும் போராட்டத்தால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
அத்துடன் பிரதமர் சர்மா ஒலி அமைதி வழிக்கு திரும்புமாறும், பேச்சுவார்தை நடத்தவும் அழைப்பு விடுத்தார்.
இருப்பினும் போராட்டகாரர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 4 visits today)