வட அமெரிக்கா

பெற்றோருடன் சேர்த்து வீட்டிற்கு தீ வைத்த 7 வயது சிறுவன்: மாற்றாந்தந்தை கைது

பெற்றோர் வீட்டில் தூங்கி கொண்டு இருக்கும் போதே வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய 7 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் முதல் தர தீவைப்பு குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

அமெரிக்காவில் வடமேற்கு சார்லஸ்டன் பகுதியில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள ஜாக்சன் கவுண்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ள தகவலில், 7 வயது சிறுவன் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே வீட்டிற்கு தீ வைத்துள்ளான் என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுவன் தீ வைத்த வீட்டின் புகைப்படத்தையும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள ஜாக்சன் கவுண்டி ஷெரீப் அலுவலகம் அவர்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Child sets home on fire in West Virginia; stepfather detained for child abuse | World News - Hindustan Times

சிறுவனின் இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு பிறகு வீட்டில் உறங்கி கொண்டு இருந்த பெற்றோர் இருவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த நிகழ்வு மிகவும் உணர்ச்சி பூர்வமான சம்பவம் என்பதால், இது தொடர்பான கூடுதல் தகவல்களை பொலிஸார் வெளியிடாமல் காத்து வருகின்றனர்.

தீவைப்பு சம்பவத்திற்கு அடுத்த நாள் சிறுவனின் மாற்றாந் தந்தை ஆரோன் ஹஃபோர்ட் குழந்தை துஷ்பிரயோக வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கூடுதலான தகவல்களை பொலிஸார் வெளியிடாத நிலையில், குழந்தை துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்டது தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வயது சிறுவன் தான் என்பதை மட்டும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்