வடகொரியாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா விரும்புகிறது!
இது 10 ,000 இராணுவ வீரர்களுடன் தொடங்கியது.
ஆனால் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான ஒத்துழைப்பை இன்னும் விரிவுபடுத்தப்படுகின்றது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் Andrei Belousov வெள்ளிக்கிழமை வடகொரியாவிற்கு விஜயம் செய்தார்.
ஒத்துழைப்பைக் கொண்டாடுவதற்காக மட்டும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவுக்குச் செல்வதில்லை.
சர்வதேச சட்டத்தை மீறி புடின் மற்றும் வடகொரிய அதிபரின் இராணுவ ஒத்துழைப்பு மேலும் விரிவடைந்து வருவதாக பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்
ரஷ்ய-கொரிய உறவுகளை வலுப்படுத்துவதில் நமது நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான நம்பகமான தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் Andrei Belousov கூறியதாக Sky நியூஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படைகளுடன் இணைந்து போரிட வடகொரியா சுமார் 10,000 வீரர்களை அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில், வட கொரியா ரஷ்யாவிற்கு 100 க்கும் மேற்பட்ட குறுகிய தூர ballistic ஏவுகணைகள் மற்றும் ஐந்து மில்லியன் பீரங்கி குண்டுகளை வழங்கியதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு சேவையான The Kyiv Independent செய்தி வெளியிட்டுள்ளது.