லக்கல வர்த்தகரின் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது

லக்கல பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான மாணிக்கக்கல், தங்கம் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பகுதிகளில் வைத்து நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டி தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோரின் கை கால்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த குழுவினர் கொள்ளையடித்துள்ளனர்.
லக்கல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பிரதேசங்களைச் சேர்ந்த 09 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம், 7 பவுன் தங்கம், இரண்டு போலித் துப்பாக்கிகள், இந்த கொள்ளை சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வேன் என்பவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 38 மற்றும் 49 வயதுக்குட்பட்டவர்கள்.
லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.