பிரித்தானியாவில் திருத்தப்பட்டுள்ள HMRC விதிகள் : டிசம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் மாற்றம்!

பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார் உரிமையாளர்களை பாதிக்கும் புதிய HMRC விதிகள் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மின்சார கார் பாவணையை தொடர்ந்து புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறது.
HMRC நிறுவனம் கார் ஓட்டுநர்களுக்கான புதிய ஆலோசனை எரிபொருள் கட்டணங்களை வெளியிட்டுள்ளது,
இதன்படி டீசல் நிறுவன கார்களுக்கான AFRகள் அனைத்தும் குறைந்துள்ளன. 2,000cc க்கும் அதிகமான இன்ஜின் அளவு கொண்ட டீசல் நிறுவன காரின் விகிதம் 18-17ppm இலிருந்து குறைக்கப்படுகிறது. அதே சமயம் 1,601-2,000cc இன்ஜின் கொண்ட டீசல் வாகனத்திற்கான புதிய AFR 14-13ppm இலிருந்து குறைகிறது.
1,600சிசி வரையிலான இன்ஜின் கொண்ட டீசல் நிறுவன கார்களுக்கான திருப்பிச் செலுத்தும் விகிதம் 12பிபிஎம்மில் இருந்து 11பிபிஎம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான செலவை ஊழியர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தால் இந்த கட்டணங்களை பயன்படுத்தலாம். இருப்பினும் இந்த கட்டணங்களை வேன்கள் தொடர்பாக பயன்படுத்தப்படக்கூடாது. இந்த நோக்கத்திற்காக ஹைப்ரிட் கார்களை பெட்ரோல் அல்லது டீசல் கார்களாக கருதலாம்.