இந்தியாவில் தனது 104 வயதில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி
முப்பதாண்டுகளுக்கு முன்னர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 104 வயது கைதிக்கு உச்ச தீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கி உள்ளது.
ரசிக் சந்திரா மண்டல் என்ப்படும் அவர் மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர்.1988ஆம் ஆண்டு தமது 68வது வயதில் கொலை வழக்கு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார்.கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால், 1994ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து 2018ஆம் ஆண்டு கோல்கத்தா உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், அவர் மீண்டும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு அந்த மனு மீது விசாரணை நடத்திய பின்னர் ரசிக் சந்திராவை இடைக்கால பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும், விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தப் பிணை வழங்கப்படுவதாக அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.