ஜெர்மனியில் கடுமையான சட்டங்களால் புலம்பெயர்ந்தோருக்கு அதிகரிக்கும் நெருக்கடி
ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஜெர்மனிக்கு அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் முக்கிய நடவடிக்கையாக கடந்த மாதம் 16ஆம் திகதி ஜெர்மனியின் எல்லைகளில் எல்லை பாதுகாப்பு சோதனைகளை ஜெர்மன் அரசாங்கமானது முடக்கியுள்ளது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி ஒரு அகதி விண்ணப்பத்தை முழுமையாக விசாரிக்கும் காலமானது தற்பொழுது 8 . 2 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இவ்வாறு அகதி விண்ணப்பத்தை முற்று முழுதாக விசாரிக்கின்ற காலமானது 6.8 மாதங்களாக காணப்பட்டது. இந்த வருடம் விசாரணை காலமானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த நாடுகளில் இருந்து ஒருவர் ஜெர்மன் நாட்டுக்கு வந்தால் இவருடைய விசாரணைகளின் முடிவு முழுதாக முடிவடையும் காலம் 2.9 மாதங்களா குறைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அகதிகளின் விசாரணைகளை மிக விரைவில் முற்று முழுதாக முடிவு செய்வதற்கான நடவடிக்கைகளை கையாள்வதற்கு ஜெர்மன் அரசாங்கமானது தீவிரம் காட்டி வருகின்றது.