ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்

ஜெர்மனியின் மேற்கு நகரமான சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் 04 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சோலிங்கன் நகரம் நிறுவப்பட்டதன் 650வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டத்தின் போது கத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அவரை கைது செய்வதற்காக கொண்டாட்ட பகுதியில் விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)