செய்தி விளையாட்டு

SA20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா SA20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தினேஷ் கார்த்திக் பெறுகிறார். இவர் இந்த தொடரின் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி துவங்க இருக்கும் புதிய SA20 சீசனில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் அதன்பிறகு முதல் முறையாக இந்த தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 180 போட்டிகளில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக், கடைசியாக ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

அதன்பிறகு இவர் பெங்களூரு அணியின் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

(Visited 73 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!