சீனாவில் பாரிய தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
சீனாவின் சீச்சுவான் (Sichuan) மாநிலத்தில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீவிபத்தில் சிக்கியவர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
13 மாடிக் கட்டடத்திலிருந்து சுமார் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கடைத்தொகுதிக் கட்டடத்தின் கீழ்த்தளங்களிலிருந்து கரும்புகை வெளியேறும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
தீப்பிடிக்க என்ன காரணம், நெருப்புப் பரவியபோது கட்டடத்தின் உள்ளே எத்தனை பேர் இருந்தனர் முதலிய விவரங்கள் தெரியவில்லை.
(Visited 30 times, 1 visits today)





