தீவிரமடையும் காசா போர்: இஸ்ரேல் தாக்குத்தலில் 90 பாலஸ்தீனியர்கள் பலி
ஹமாஸ் இராணுவத் தளபதியை இஸ்ரேல் தாக்கியதில் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சனிக்கிழமையன்று காசாவில் நியமிக்கப்பட்ட மனிதாபிமான வலயத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்,
மூத்த ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் துணைத் தலைவர் ரஃபா சலாமா ஆகியோரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, டெய்ஃப் மற்றும் மற்றொரு ஹமாஸ் கமாண்டர் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாக இல்லை என்றும், ஹமாஸ் தலைமையை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக உறுதியளித்தார் என்றும் கூறினார்
“எதுவாக இருந்தாலும், நாங்கள் ஹமாஸின் முழு தலைமையையும் பெறுவோம்” என்று நெதன்யாகு ஒரு செய்தி மாநாட்டில் கூறியுள்ளார்.