பிரான்ஸ் அரசியலில் புதிய திருப்பம் – ஆட்சியை கைப்பற்றும் வலதுசாரிகள்
பிரான்ஸில் நடந்த தேர்தலில் வலதுசாரிகள் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
முதற்சுற்று வாக்கெடுப்புக்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஜனாதிபதி மக்ரோனின் Renaissance கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rassemblement National கட்சி எதிர்பார்த்தபடியே அதிகூடிய இடங்களைகைப்பற்றியுள்ளது. 34% சதவீத வாக்குகளை அது பெற்றுள்ளதாகவும், Nouveau Front Populaire கூட்டணிகள் 29% சதவீத வாக்குகளையும், மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி 22% சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் (Emmanuel Macron) மத்தியக் கூட்டணி 20 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது.
முதல் சுற்று வாக்களிப்பில் வேட்பாளர் எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், அடுத்த சுற்றுத் தேர்தல் நடத்தப்படும். 12.5 சதமேல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தகுதி பெறுவர். வரும் 7ஆம் திகதி அடுத்த சுற்று வாக்குப்பதிவு நடக்கும்.