இங்கிலாந்தில் டெஸ்லா கார் மற்றும் பேருந்து மோதி விபத்து – ஒருவர் பலி

இங்கிலாந்து-யோர்க்கில் பேருந்து ஒன்றும் காரும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
டெஸ்லா காரில் பயணித்த 31 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வடக்கு யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
டெஸ்லா காரின் சாரதியான 32 வயதுடைய நபர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்லாவில் இருந்த மூன்று பயணிகளும், பேருந்தின் ஓட்டுநரும் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்றனர்.
உயிரிழந்த நபர் நியூகேஸில் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெஸ்லா டிரைவர் டீஸைட் சேர்ந்தவர்.
(Visited 19 times, 1 visits today)